நாணய மாற்று தொழிலில் ஈடுபட்டவரை கடத்தியதாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் நாணயமாற்று தொழில் செய்யும் சரவணன் என்பவரை கடத்தியதாக ஆமத்தூர் காவல்துறையினர் 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆறுமுகசாமி, சாலை புதூரை சேர்ந்த ராம் கனகசபாபதி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் மற்ற 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆறுமுகசாமி நாணய மாற்று வணிகத் தொடர்பில் சரவணன், தனக்கு பணம் தரவேண்டியது இருப்பதாக தெரிவித்துள்ளார்.