Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. மர்ம நபர்களின் கைவரிசை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மாடி வழியாக மர்மநபர்கள் கம்பியை உடைத்து வீட்டிற்குள் இறங்கி பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவில் அதாவுர் ரஹ்மான் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நூரே சபா என்ற மனைவி இருக்கின்றார். இவர் குழந்தைகளுடன் வாணியம்பாடியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நூரே சபாவின் தாய் ஷர்புன்னிசா உடல் பற்றாக்குறை காரணமாக பக்கத்து தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக நூரே சபா அங்கேயே தங்கியிருந்தார். இதனையடுத்து மீண்டும் நூரே சபா வீட்டிற்கு சென்ற போது இரண்டு அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன்பின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 95 பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நூரே சபா கொடுத்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள இரும்பு கிரீலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதனைதொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து புதூர் பைபாஸ் சாலை வழியாக 5 கிலோமீட்டர் தூரம் ஓடி நின்றது. இவ்வாறு நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்கு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமார் போன்றோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |