வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் நடத்தி வந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிடுகின்றனர்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததுடன் அதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்கங்கள் அறிவித்தனர்.
அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்களை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கெடு விதித்தனர். அதை ஏற்று வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து விவசாய சங்கங்களுக்கு அரசு அனுப்பி வைத்தது. இதனைத்தொடர்ந்து விவசாய சங்கங்கள் இன்று போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து உள்ளனர்.