மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து, நேற்று மியான்மார் மக்கள் வினோத முறையில் ராணுவத்தினருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையானது நேற்று உலக நாடுகள் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்த ஈஸ்டர் பண்டிகையியானது, மேற்கத்திய நாடுகளில் முறைப்படி ,முட்டைகளை வைத்து கொண்டாடுவர். இந்த ஈஸ்டர் பண்டிகையானது மியான்மரில் வினோத முறையில் கொண்டாடப்பட்டது. அதில் ஈஸ்டர் முட்டைகளை வைத்து மியான்மர் மக்கள் ராணுவத்திற்கு எதிரான வாசகங்களை ,அந்த முட்டைகளை எழுதப்பட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ராணுவத்துக்கு எதிராக, எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் யாங்கூன் ,மாண்டலே நகரங்களில் ஈஸ்டர் முட்டைகளை வைத்து போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்களும், போராட்டக்காரர்களும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் , நினைவாக சாலைகளில் மலர் வளையத்தை வைத்து போராட்டத்தை நடத்தினர்.