Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் இல்லாததால்….. இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் தாலி கட்டிய இன்ஜினியர்….!!

திருப்பூர் அருகே தமிழக கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இளஞ்ஜோடிகள் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு  ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து வரும் போதிலும், பல்வேறு தளர்வுகள் 5 ஆம் கட்ட  ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளது. மீறி நடக்கும் பட்சத்தில் வீட்டில் வைத்து 50 நபர்களுக்கு மிகாமல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது. அதன்படி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணிற்கும், கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் ராபின்சன் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மே மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தவர்கள், ஊரடங்கிற்கு பின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என தள்ளி வைத்தனர். ஆனால் அது தற்போது நடக்கின்ற விஷயமாக   தெரியவில்லை என்பதனால்,

பொறுமை இழந்தவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி திருப்பூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில் வைத்து சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு கோவையில் பணிக்காக தங்கியிருந்த  மணபெண்ணையும் அழைத்துக் கொண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு  சென்றுள்ளார். ஆனால் அவர்களை தமிழக கேரள எல்லையில் மடக்கி பிடித்த கேரள காவல்துறை அதிகாரிகள் இ பாஸ் இல்லாததை சுட்டி காட்டி பெண்ணைத் தவிர மற்றவர் உள்ளே நுழைய அனுமதி இல்லை என மறுக்கவே,

பெண் வீட்டாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் தமிழக கேரள எல்லையான சின்னாறு பகுதிக்கு  வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து தமிழக கேரள எல்லையான சின்னாறு  பகுதியில் நடுரோட்டில் வைத்து 20 பேருக்கும் குறைவான நபர்களை வைத்து மகிழ்ச்சி பொங்க திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்ட பின்  அவளை  கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். இந்த வித்தியாசமான திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |