தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நான்காவது கட்ட தளர்வு குறித்து திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி,
ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார். இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இ பாஸ் முறை ரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
இ பாஸ் ரத்து என்பது உட்பட தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய விஷயங்களை அச்சுப் பிசகாமல் முதல்வர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு, கல்லூரி தேர்வு ரத்து என அனைத்திலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் சொல்கிறார், ஈபிஎஸ் செய்கிறார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.