விஜய் ஷங்கருக்கு எதிராக ரசிகர்கள் செய்து வரும் விமர்சனத்திற்கு ,பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ,இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் எழுந்தது. குறிப்பாக இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக, தமிழக வீரர் விஜய் ஷங்கரை ,தேர்ந்தெடுத்தது தான் பிரச்னையை கிளப்பியது. உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி வீரர்களை மிடில் ஆடர் சரியாக இல்லாததால், இந்திய அணி மிடில் ஆர்டரில் சொதப்பி வந்தது.
இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட பல அறிமுக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைத்தது. அம்பத்தி ராயுடு இந்த மிடில் ஆர்டரில், விளையாடுவதற்கு தகுந்த வீரராக இருப்பார் ,என்று பல்வேறு முன்னணி வீரர்களும் ,ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்தன.ஆனால் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் சங்கர் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில், அம்பத்தி ராயுடு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார் என்றும், ஆனால் விஜய் சங்கர் பீல்டிங் ,பேட்டிங் ,பௌலிங் என ஆல்-ரவுண்டராக செயல்படுவார் ,என்று அறிக்கை வெளியிட்டனர். ஆனால் இந்திய அணியில் பங்குபெற்ற விஜய் ஷங்கர், கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார். அதன்பின்னர் இவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய விஜய் சங்கர், காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே தொடரில் இருந்து விலகினார்.
தற்போது நடப்பு சீசனில் சில தினங்களுக்கு முன் நடந்த, கொல்கத்தா- ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் ,11 ரன்களை மட்டுமே எடுத்த விஜய் சங்கரால் , இந்த சீசனிலும் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அவர் இந்திய அணியில் மறுபடியும் சேர்வது கேள்விக்குறியாகிவிடும் ,என்று ரசிகர்களும் ,விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர்.
இதை பற்றி அவர், பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறும் போது , நான் இந்திய அணியில் இடம்பெறுவதை ,நினைத்து விளையாடுவதில்லை என்றும், என்னுடைய கிரிக்கெட்டை ரசித்து ஆடுகிறேன் என்றும் கூறினான். இந்திய அணிக்கு விளையாடுவது என்றால் அதிக உழைப்பும் ,மன அழுத்தமும் ஏற்படும் என்று கூறினார். என்னுடைய மன நிம்மதிக்காக விளையாடுவதாகவும் , வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறேன் ,என்று அவர் கூறினார்.