பிஎப் என்பது அரசின் கீழ் இயங்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்குக்கு செலுத்துவார்கள். இத்தொகைக்கு வட்டி விகிதமும் கொடுக்கப்படும் மற்றும் வரி சலுகையும் கிடைக்கும். அவ்வப்போது இந்த பிஎப் கணக்கிற்கு சில மாற்றங்கள் அறிவிக்கப்படும். அண்மையில் கூட பிஎஃப் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியது.
பிஎப் கணக்கின் நன்மைகளைப் பெற விரும்பினால் ஊழியர்கள் தங்களது நாமினியை சேர்க்க வேண்டும். இல்லையெனில் பிஎப் கணக்கில் இருந்து பெறப்படும் தொகை எதுவுமே பெற முடியாத சூழல் ஆகிவிடும். பிஎப் கணக்கை புதிய வங்கி கணக்குடன் இணைக்க முதலாவதாக https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்ற இணையதள முகவரிக்கு சென்று யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து லாகின் செய்து கொள்ளவேண்டும்.
அதன்பின் மேனேஜ் டேபை கிளிக் செய்ய வேண்டும். இதில் கீழ் தோன்றும் மெனுவில் இருந்து ‘KYC’-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து அதில் வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டை பதிவு செய்து “சேவ்” என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் பதிவுசெய்த விபரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் (அப்ரூவ்ட் KYC செக்ஷன்) தோன்றும். இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் பிஎஃப் கணக்குடன் புதிய வங்கி கணக்கை இணைத்துவிடலாம்.