EPFO ஓய்வூதியத் திட்டத்தில் வந்திருக்கும் பெரிய மாற்றத்தின் வாயிலாக கோடிக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற போகிறார்கள். அதன்படி ஓய்வூதியம் அமைப்பானது, அதன் ஓய்வு பெறும் ஊழியர்களை அவர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் இபிஎஸ் 95ன் கீழ் டெபாசிட்செய்த தொகையினை 6 மாதங்களுக்குள் திரும்பப் பெற அனுமதித்து இருக்கிறது. மத்திய அறங்காவலர் குழு அரசிடம் 6 மாத காலத்திற்கும் குறைவான பதவிக் காலம் உள்ள ஊழியர்களும் அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி பற்றி பரிந்துரை செய்துள்ளது.
மேலும் 34 வருடங்களுக்கும் மேல் பங்களிக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு விகிதாச்சாரம் ஓய்வூதிய பலன்களை வழங்க அறங்காவலர் குழுவானது அரசாங்கத்திடம் பரிந்துரை செய்திருக்கிறது. இவ்வசதியின் வாயிலாக ஊழியர்கள் அதிகளவு ஓய்வூதியம் பயனை பெற்றுக்கொள்ளலாம். இதுவரையிலும் ஊழியர்கள் 6 மாதங்களுக்கும் குறைவான சேவையுடன் தங்களது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மட்டுமே திரும்பப்பெற அனுமதிக்கப்பட்டனர். எனினும் தற்போது எடுக்கப்பட்ட புது முடிவின் அடிப்படையில் ஊழியர்களுக்கு மிகப் பெரிய தொகை கிடைக்கப் பெறும்.
சென்ற திங்கள்கிழமை நடந்த 232-வது கூட்டத்தில் இபிஎஸ் 95 திட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியநிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைத் திரும்பப்பெற அனுமதிக்கவேண்டும் என்று மத்திய அறங்காவலர் குழு அரசுக்குப் பரிந்துரை செய்தது. அந்த கூட்டம் மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் டெபாசிட்டுகளை திரும்பப் பெறுவது பற்றி முடிவெடுக்கப்பட்டது. மத்திய அறங்காவலர் குழுவும், ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட் யூனிட்டில் முதலீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.