இந்தியாவில் மாதச்சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொண்டுள்ளனர். இந்த சேமிப்பு நிதியானது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியமாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்களிடம் வழங்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் PF கணக்கில் பல்வேறு வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதில் முதலாவதாக PF கணக்கின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த 30ம் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் PF கணக்கில் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் நிறுவனம் வழங்கும் PF பங்களிப்பு தங்கள் கணக்கில் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக 31-ஆம் தேதிக்குள் PF கணக்கில் நாமினியை நியமிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஏனென்றால் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் இந்த நிதியை யாரிடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த நிதி யாருரிடம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடப் படவில்லை என்றால் PF பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து EDLI என்ற ஊழியர்கள் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இழப்புத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பணியில் இருக்கும் போது இறந்து போனால் அவருடைய நாமினி அல்லது வாரிசுக்கு 7 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படுவதற்காக பிரீமியம் தொகை செலுத்த தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக PF கணக்கு ஒதுக்கிய ஊழியர் 2 pf கணக்க்கை தனித்தனியாக பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் அறிவித்துள்ளது. மேலும் pf கணக்கு வைத்திருப்பவர்கள் வைப்பு நிதியை பெறுவதற்காக EPFO ல் அறிவிக்கப்படும் அனைத்து மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.