தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் ஊழியர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் இபிஎப்ஓ திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சிலசமயங்களில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம் ரகசிய எண் போன்றவற்றை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரேனும் கேட்டால் கூறக்கூடாது. அதோடு இது போன்றவற்றை இபிஎஃப்ஒ ஒருபோதும் உறுப்பினர்களிடம் கேட்காது.
அதோடு இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களது ஆவணங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைப்பது எப்படி என்பது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக டிஜி லாக்கர் போன்ற சேவைகளை இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிஜி லாக்கர் என்பது ஆவணங்களை சேமிப்பதற்கும் சரி பார்ப்பதற்கும் பாதுகாப்பான ஒரு தளமாகும். யுஏஎன் அட்டை, ஓய்வூதியம் செலுத்தும் சான்றிதழ் மற்றும் திட்ட சான்றிதழ் போன்றவற்றையும் இந்த ஆப்பின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம்.