பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்களது கணக்கில் நாமினிகளை இணைக்க வேண்டும் என்பதனை EPFO கட்டாயமாக்கியது. இத்திட்டத்தின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர்கள் விபத்து உள்ளிட்ட சில காரணங்களால் திடீரென்று இறக்க நேரிடும் சமயத்தில் தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தால் மட்டுமே பென்ஷன் உள்ளான அனைத்து பயன்களையும் பெற முடியும். அவ்வாறு பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைக்கவில்லையென்றால் பிஎஃப் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.
முன்னதாக தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தவர்களும் புதிய நாமினிகளை இணைக்கும் வண்ணம் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வாயிலாகவே எளிதில் நாமினியை தேர்வு செய்யவும் மற்றும் புதிய நாமினியை அப்டேட்டும் செய்து கொள்ளலாம். பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் நாமினியை அப்டேட் செய்து விட்டால் பிஎஃப் உறுப்பினர்கள் EDLI (தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீடு) திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் ரூபாய் 7 லட்சம் வரை பயன்பெற முடியும்.
அதுமட்டுமல்லாமல் புதிய நாமினியை அப்டேட் செய்வதற்கு முன் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி உறுப்பினர்களின் பிஎஃப் நம்பர், கணக்கு எண், பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பிஎஃப் அமைப்பு ஒருபோதும் போன் கால், வாட்ஸ் ஆப் ஆகிய சமூகவலைத்தளங்கள் மூலம் கேட்கமாட்டார்கள். இதன் காரணமாக இத்தகைய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.