இபிஎப் வாரியம் சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப் விகிதத்தை 8.5% லிருந்து 8.1% ஆக குறைத்தது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இபிஎஃப் இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீட்டு வரம்பு அதிகரிப்பது குறித்து இபி எஃப்ஓ வாரியம் விரைவில் முடிவு எடுக்கப்படும். வருகின்ற ஜூலை 29 மற்றும் 30ஆம் தேதியில் இபிஎஃப்ஓ வாரியம் கூடுகிறது. இதில் பங்குச்சந்தை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் தற்போதுள்ள முதலீட்டு வரம்பை 15% லிருந்து 20% உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம். இபிஎஃப் வாரியம் இந்த முடிவு எடுத்தால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறுவார்கள். அதனை தொடர்ந்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வரர் டெலி, சிபிடி யின் துணை குழுவான எஃப்ஐசி, பங்குகள் மற்றும் தொடர்பான முதலீடு வரம்பை 5-15% உயர்த்த பரிந்துரைக்க உள்ளது என்று என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பங்கு சந்தையில் இபிஎஃப்ஓ முதலீட்டு வரம்புகளை அதிகரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த முதலீட்டிற்கு அரசு உத்தரவாதம் இருக்காது என்பதால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரலாம் என்று அரசாங்க நம்புகிறது. இந்நிலையில் பங்குச்சந்தையில் முதலீட்டின் வரம்பை 20% உயர்த்தும் திட்டத்திற்கு இபிஎஃப்ஓ-யின் நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இபிஎஃஓ அதன் நிதியில் 5-15% மட்டுமே பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் மூலம் முதலில் செய்து வருகிறது. இந்த முறை இபிஎப்ஓவிற்கு முதலீட்டின் மூலம் 2020-21 நிதியாண்டில் 16.27 செய்த லாபம் கிடைத்துள்ளது. இதனையடுத்து இபிஎஃப்ஓ 15 ஆண்டுகளுக்கு அணுசக்தி பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது. அதற்கு 6.89% வட்டி செலுத்தப்படும். தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு பத்திரங்களுக்கு 7.27% முதல 7.57% வரை வட்டி கிடைக்கிறது. இபிஎஃஓ அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களின் முதலீடு செய்வதில் குறைந்த வருமானத்தை பெறுகிறது.