Categories
தேசிய செய்திகள்

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு… UAN நம்பரை கண்டுபிடிக்கணுமா?… வெளியான அறிவிப்பு….!!!!

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அமைப்புதான் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி. இந்த அமைப்பு நாடு முழுதும் உள்ள வருங்கால வைப்பு நிதிகளை ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. பணியாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வரும் ஊழியர்களுக்கு EPFOயுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியது. அதன்படி PF கணக்கைக்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் 12 இலக்க யுனிவர்சல் கணக்கு எண் வழங்கப்படுகிறது.

இதனிடையில் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஐடிகளுக்கும் UAN மைய களஞ்சியமாக இயங்கி வருகிறது. வாழ்நாள் முழுதும் ஒரு ஊழியருக்கு அதே UAN தான் பயன்பாட்டில் உள்ளது. EPF உறுப்பினர்கள் UAN எண்ணை EPFO போர்ட்டல் வாயிலாக உருவாக்கிக்கொள்ளலாம். இப்போது எப்படி UAN எண்ணை அறிந்துகொள்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். முதலில் EPFO ன் அதிகாரபூர்வமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதள முகவரிக்கு சென்று, அதிலுள்ள UAN ஒதுக்கீடு என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின் மாநில மற்றும் EPFO அலுவலகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். PF எண், பெயர், பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண் ஆகிய அனைத்து விபரங்களையும் பதிவிடவும். அவற்றில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு, அதில், Captcha ஐ உள்ளிட்டு OTP ஐ உருவாக்கவும் என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்ட பின் OTP-ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். OTP எண்ணை பதிவிட்டதும் UAN எண்ணை கண்டுபிடித்துவிடலாம்.

Categories

Tech |