EPFO குறித்த எந்த ஒரு வசதியையும் ஆன்லைனில் பெற யூஏஎன் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதனிடையில் யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் அதனை ஈஸியாக தெரிந்துகொள்ளலாம். முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரிக்கு போகவேண்டும். அவற்றில் வலதுபக்கத்திலுள்ள எம்பிளாய் லிங்க்ட் பிரிவில் கிளிக் செய்து, “நோ யுவர் யூஏஎன்” எண்ணைக் கிளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவேண்டும். பின் பிறந்ததேதியுடன், ஆதார் (அ) பான் எண்ணை உள்ளிடுவதன் வாயிலாக யூஏஎன் எண்ணை காண முடியும்.
EPFO கணக்கை இணைப்பதற்கான செயல்முறை குறித்து தெரிந்துகொள்வோம்.
# https://www.epfindia.gov.in/site_en/ என்ற அதிகாரபூர்வமான EPFO கணக்கிற்கு போகவேண்டும்.
# தற்போது எனது கணக்கு என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
# என் கணக்குப் பக்கத்தில், கணக்கு விபரங்களின் கீழ் கணக்குகளை ஒன்றிணை என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
# அதன்பின் கணக்குகளை ஒன்றிணைத்தல் பக்கத்தில், உங்களது புது கணக்கில் இணைக்க விரும்பும் கணக்குகளின் விபரங்களை உள்ளிட வேண்டும்.
# உங்களது EPFO கணக்குடன் பல வங்கிக்கணக்குகள் இணைக்கப்பட்டு இருந்தால், புது வங்கிக்கணக்காக எதனை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
# அதன்பின் சேவ் மற்றும் க்ளோஸ் என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
# தற்போது உங்களது புது இணைக்கப்பட்ட EPFO கணக்கு உருவாக்கப்படும்.