கடந்த 2018 ஆம் வருடம் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விதமாக ஆயுஸ்மான் பாரத் எனும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஆயுஸ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் வருடத்திற்கு 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். கூலித்தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் போன்ற 11 வகையான தொழில் பிரிவில் இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அரசின் உதவியை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் பெற முடிகிறது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி ஈசியாக பெற்றுக்கொள்ள முடியும். இதுவரை அனைத்து தரப்பட்ட மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஆயுஸ்மான் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை EPFO சந்தாதாரர்களும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் என்று தகவல் வெளியாக இருக்கிறது. பணியாளர்கள் வைப்புத் தொகை EPFO ஆல் நிர்வகிக்கப்படும் ஒரு காப்பீட்டு திட்டம் ஆகும். இது EPFO பதிவு செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கிறது.
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக 7 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் EPF மற்றும் EPS போன்றவற்றையும் பயன்படுத்துகிறது. ஒருவேளை இந்த திட்டத்தில் இணைந்துள்ள ஒரு ஊழியர் பணியின் போது இறந்தால் இந்த திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும் ஆயுஷ்மான் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலமாக இபிஎப்ஓ ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் 5 லட்சம் வரை அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
இது மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களுக்கான பாதுகாப்பும் அடங்கும். அதிலும் குறிப்பாக இந்த திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னும் பின்னும் அனைத்து செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும். ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகள் தகுதி அட்டைக்கான பொது சேவை மையங்களில் முதலில் தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பின் உங்களது கிராமப்புற ஆப்பரேட்டரிடம் 30 ரூபாய் செலுத்திய பின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்திற்கான அட்டை கிடைக்கிறது. ஆனால் தற்போது புதிய நடைமுறையின் கீழ் முதல் முறையாக அட்டையை பெறுவது இலவசமாக்கப்பட்டிருக்கிறது.