தொழிலாளர்களுக்கு ஓய்வுக் காலத்தில் பயன் அளிக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாக தொழிலாளர்களுக்கு ஓய்வின்போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத்தொகை வட்டியுடன் அளிக்கப்படுகிறது. இதற்கென தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் காலத்தின் போது, ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வைப்புநிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO-ன் பல நன்மைகளைப் பெற, உறுப்பினர்கள் தங்களது இ-நாமினேஷன் செயல்முறையை முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் EPFO அமைப்பு இதுவரையிலும் இ-நாமினேஷனைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. எனினும் ஒவ்வொருவரும் தங்களது குடும்பங்களுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்க மின்-நாமினேஷனைத் தாக்கல் செய்யுமாறு EPFO அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. தற்போது ஒரு EPF உறுப்பினர் மின்-நாமினேஷனைத் தாக்கல் செய்வதற்கான கோரிக்கையை ஆன்லைனில் UAN போர்ட்டல் வாயிலாக செய்யலாம்.
மின் நியமனத்தின் நன்மைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்:
# இ-நாமினேஷனைத் தாக்கல் செய்தபின் ஒரு EPFO உறுப்பினர் இறந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆன்லைன் தீர்வைக் கோரலாம் என EPFO தெரிவித்து இருக்கிறது.
# PF, ஓய்வூதியம் மற்றும் ரூபாய்.7 லட்சம் வரையிலான காப்பீட்டுக்கான ஆன்லைன் பேமெண்ட், பேப்பர்லெஸ் மற்றும் விரைவான க்ளைம் செட்டில் மெண்ட் தகுதியான நாமினிகளுக்கு வழங்கப்படும்.
# வருங்கால வைப்புநிதி (PF), ஓய்வூதியம் (EPS), மற்றும் காப்பீடு (EDLI) பலன்களைப் பெறுவதற்கு ஒருவரின் EPF கணக்கில் மின்நியமனம் செய்யப்படவும்.
ஆன்லைனில் EPF பரிந்துரையை தாக்கல் செய்வதற்கான 10 எளியவழிமுறைகள்:
# EPFO இணையதளத்துக்கு சென்று “சேவைகள்” பகுதிக்குச் செல்ல வேண்டும்.
# ஊழியர்களுக்கான பகுதியைக் கண்டறிந்து “உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை” என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும்.
# தற்போது UAN மற்றும் கடவுச் சொல் வாயிலாக உள்நுழைய வேண்டும்.
# நிர்வகி தாவலின் கீழ் இ-நாமினேஷன் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# இப்போது “விபரங்களை வழங்கு” தாவல் தோன்றும், “சேமி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
# உங்களது குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க “ஆம்” என்பதைக் கிளிக் செய்து, குடும்ப உறுப்பினர்களின் ஆதார், பெயர், பிறந்ததேதி, பாலினம், உறவு, முகவரி, வங்கிக்கணக்கு விவரங்கள் (விரும்பினால்), பாதுகாவலர் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய விவரங்களைச் சேர்க்க வேண்டும்.
# ஒன்று (அல்லது) அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க, தற்போது குடும்ப விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
# பங்குகளின் மொத்தத் தொகையை அறிவிக்க “நாமினேஷன் விவரங்கள்” என்பதைக் கிளிக் செய்து, சேவ் இபிஎப் நியமனம் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
# OTP ஐ உருவாக்க தற்போது “e-Sign” என்பதைக் கிளிக்செய்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்களது மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-யைச் சமர்ப்பிக்க வேண்டும்.
# EPF நியமன அறிவிப்புக்குப் பின் உறுப்பினர்களால் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
# இ-நாமினேஷனைச் சமர்ப்பிக்க ஒரு உறுப்பினர் முதலில் தன் UAN கணக்கை UAN உறுப்பினர் போர்ட்டலில் செயல்படுத்த வேண்டும் மற்றும் அவரது UAN, உறுப்பினர் ஐடி, நிறுவன ஐடி, பெயர், பிறந்ததேதி, தந்தை/ மனைவி பெயர், உறவு, இணைந்த தேதி போன்றவற்றை உறுதிசெய்ய வேண்டும். ஆன்லைனில் நியமன விபரங்களைப் பெறுவதற்கு உறுப்பினர் ஒவ்வொரு நாமினிக்கும் ஒரு KYC விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அனைத்து PF/ EDLI பரிந்துரைக்கப்பட்டவர்களின் மொத்தப்பங்கு 100 சதவீதம் சமமாக இருக்க வேண்டும்.