PF கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆன்லைனில் நாமினேஷன் செய்யும்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. PF கணக்கு தாரர்கள் ஆன்லைனில் நாமினேஷன் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பிஎஃப் கணக்கு தாரர்கள் ஆன்லைன் மூலமாக நாமினேஷன் செய்யலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.
பிஎஃப்,பென்சன் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களின் பயனாளிகள் விட்டால் அவரது குடும்பத்தினர் அல்லது வாரிசுகளுக்கு பலன் கிடைக்க நாமினேஷன் செய்வது அவசியம். அதனால் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு நாமினேசன் தாக்கல் செய்யலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இருந்தாலும் முன்னரே நாமினேசன் தாக்கல் செய்து விடுவது நல்லது.
ஆன்லைனில் நாமினேஷன் செய்வது எப்படி?
* EPFO இணையதளத்தில் உள்ள services பகுதியில் For Employees பகுதியில் உள்ள Member UAN/Online Service பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
* UAN எண் மற்றும் Password வைத்து உள்ளே நுழையவும்.
* Manage பகுதிக்கு கீழ் உள்ள E-Nomination பிரிவை கிளிக் செய்யவும்.
* Provide Details பக்கம் இப்போது திறக்கு. அதில் save பட்டனை கிளிக் செய்யவும்.
* Yes பட்டனை கிளிக் செய்யவும்.
* Add family details பட்டனை கிளிக் செய்யவும்.
* Nomination details பட்டனை கிளிக் செய்து Save EPF Nomination பட்டனை கிளிக் செய்யவும்.
* E-Sign பட்டனை கிளிக் செய்தால் மொபைலுக்கு OTP வரும். அதை பதிவிட்டால் முடிந்தது.