Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே…. இனி உங்க வாழ்நாள் சான்றிதழை இப்படியும் சமர்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.இதனை ஆண்டின் எந்த ஒரு நேரத்திலும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முன்னதாக ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமன் பத்திராவை சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரை காலகேடு பிப்ரவரி 28 வரை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.அதன் விளைவாக ஓய்வூதியதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய சூழல் இருந்ததால் மிகவும் அவதிப்பட்டனர். ஆனால் தற்போது வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஓய்வூதியத்தாளர் எந்த நேரத்திலும் ஒரு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

அது சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான பல விருப்பங்களையும் தற்போது வழங்கியுள்ளது.அதன்படி ஓய்வூதியம் பெறுவோர் உள்ளூர் தபால் நிலையங்களிலும் ஓய்வூதியம் வழங்கும் வங்கி இடங்களிலும் டிஜிட்டல் நகலை சமர்ப்பிக்கலாம்.

ஒரு சந்தாதாரர் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை UMANG செயலி அல்லது பொதுவான சேவை மையத்தின் மூலமாக சமர்ப்பிக்கலாம்.மேலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஓய்வு பெற்றவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் லைப் சான்றிதழ் சேவையை வழங்குகின்றது.அதற்காக முதியவர்கள் ஆன்லைன் கோரிக்கையை சமர்ப்பித்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.இந்த கோரிக்கை பதிவு செய்யப்படும் போது வீட்டில் இருந்தபடியே DLCஉருவாக்கும் செயல்முறையை ஆய்வு செய்து முடிக்க அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை சேர்ந்த தபால்காரர் ஓய்வூதியதாரரை பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |