ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து இருக்கிறது. இது கோடிக் கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கப்போகிறது. ஓய்வூதியம் நிதி அதன் சந்தாதாரர்களை 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களின் இபிஎஸ் 95ன் கீழ் வைப்புத் தொகையை திரும்பப்பெறுவதற்கு அனுமதித்து உள்ளது. பிடிஐ செய்தியின் படி, தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணமெடுக்கும் வசதியும் உள்ளடங்கும் என கூறப்பட்டது.
நாடு முழுதும் மொத்தம் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் இருக்கின்றனர். அத்துடன் 34 வருடங்களுக்கும் மேல் இத்திட்டத்தில் அங்கம் வகிக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு விகிதாசார ஓய்வூதிய பயன்களை வழங்குவதற்கு அறங்காவலர் குழுவானது பரிந்துரை செய்து இருக்கிறது. இவ்வசதி ஓய்வூதியம் பெறுபவர்கள் அதன் பயனை நிர்ணயிக்கும் சமயத்தில் அதிகமான ஓய்வூதியத்தை பெறுவதற்கு உதவும். இதுவரையிலும் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பின் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்கும் குறைவான சேவை இருந்தால் மட்டுமே தங்களது ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுக்க அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஓய்வூதிய அமைப்புநிதி எடுத்திருக்கும் இந்த முடிவுக்குப் பின் தற்போது அந்த சந்தாதாரர்களுக்கு பெரிய நிவாரணமானது கிடைக்கும். அதன் மொத்த சேவை இன்னும் 6 மாதங்கள் மட்டுமே ஆகும். இது தவிர்த்து 34 வருடங்களுக்கும் மேல் திட்டத்தின் ஒரு பகுதியாகவுள்ள உறுப்பினர்களுக்கு விகிதாசார ஓய்வூதியம் பலன்களை அளிக்கவும் அறங்காவலர் குழுவானது பரிந்துரைத்து உள்ளது. இவ்வசதியின் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்கும் சமயத்தில் அதிக ஓய்வூதியம் பெற இயலும். இபிஎப்ஓ இன் அறங்காவலர் குழு, எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட் யூனிட்களில் முதலீடு செய்வதற்குரிய மீட்பின் கொள்கைக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுதவிர்த்து 2021-22 நிதி ஆண்டிற்கான EPFOன் செயல்பாடு பற்றி தயாரிக்கப்பட்ட 69வது ஆண்டு அறிக்கையும் அங்கீகரிக்கப்பட்டது. இவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.