Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!… ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைய போகின்றனர். ஓய்வூதிய நிதி 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு இபிஎஸ் 95-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெற அனுமதி அளித்துள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியானது வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது.

இது தவிர்த்து 34 வருடங்களுக்கும் மேல் இந்த திட்டத்தில் சேவையாற்றும் உறுப்பினர்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை வழங்கவேண்டும் என அரசிடம் அறங்காவலர்குழு பரிந்துரை செய்து உள்ளது. மத்திய அறங்காவலர் குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்கக்கூடிய பட்சத்தில் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அதிகளவு ஓய்வூதியம் கிடைக்கப் பெறும். இப்போது வரை 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியர்கள் அவர்களின் EPFO கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெற அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

எனினும் தற்போது ஓய்வூதிய அமைப்பு நிதி எடுத்திருக்கும் முடிவின் படி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மிகப் பெரிய தொகை நிவாரணமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில், இபிஎஸ் 95-ன் கீழ் செய்யப்பட்ட டெபாசிட்களை திரும்பப் பெறுவது பற்றி முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் அமைச்சகம் கூறுகிறது. அத்துடன் தொழிலாளர் அமைச்சகம் கூறியதாவது, EPFO-ன் அறங்காவலர்குழு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட் யூனிட்களில் முதலீடு செய்வதற்க்கு ஒப்புதல் அளித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது

Categories

Tech |