மத்திய -மாநில அரசுகள் தங்கள் அரசின் நிதி ஒதுக்கீட்டின் படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை அளித்து வருகிறது. இதன் காரணமாக சாதாரண மற்றும் ஏழை-எளிய மக்கள் சிறந்த மருத்துவ வசதிகளை பெறுகின்றனர். அரசு ஊழியர்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இதனால் மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.
இதேபோன்று தற்போது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினை ஊழியர் வருங்கால வைப்புநிதி பயனர்களும் அனுபவிக்க முடியும். இதனிடையில் சாலையோர வியாபாரிகள், சுமை தூக்குவோர், கூலிதொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட 11 வகையான தொழில் பிரிவில் இருப்பவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்குரிய ஒப்புதலை மத்திய அரசு இம்மாத இறுதிக்குள் அளிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்பெறும் அடிப்படையில் ரூ. 7 லட்சம் வரை நிதிஉதவி பெற முடியும். பதிவுசெய்யப்பட்ட பணியாளர் பணி சமயத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் இத்தொகையை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் மருத்துவ காப்பீட்டிலும் EPFO பயனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் ரூபாய்.5 லட்சம் வரை திடீர் நோய்கள் மட்டுமின்றி நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.