பிஎப் தொகை பயனுள்ளதாகவும், ஆபத்தான காலத்தில் கைகொடுக்கும் தொகையாகவும் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் இந்த சிறியதொகை எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டால், கைகொடுக்கும். பிஎப் பணமெடுக்க ஆன்லைன் வசதியினை அரசு வழங்கியதிலிருந்து, அதன் சந்தாதாரர்கள் வசதியாக இதனை செய்ய முடிகிறது. முன்னதாக ஒருவர் பிஎப்-ல் இருந்து பணம் எடுக்க பல்வேறு தினங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. தற்போது சில மணி நேரங்களில் உங்களது கணக்கில் பிஎப் பணம் வந்து விடும். மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் பிஎப்-ல் இருந்து இரட்டிப்புத்தொகையையும் எடுக்கலாம்.
கொரோனா தொற்றுக்களை கருதி ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து இரண்டுமடங்கு தொகையினை எடுக்கலாம் என்ற வசதியை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. அதன்படி முன்னர், இபிஎப்ஓ ஊழியர்களுக்கு நான் ரீபண்டபிள் அட்வான்ஸ் எடுப்பதற்குரிய அனுமதியை அளித்தது. தற்போது இந்த வசதியானது 2 மடங்கு தொகை எடுக்க (அல்லது) இரண்டுமுறை முன் பணம் எடுக்க கிடைக்கிறது. அதாவது, இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஊழியர் இந்நிதியை 2 முறை எடுக்கலாம். முன்பு இவ்வசதி ஒருமுறை மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களின் சவுகரியத்துக்காகவே இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன் செயல் முறையை இங்கு அறிந்துகொள்ளலாம்.
# இதற்கு உறுப்பினர் இ-சேவை போர்டலான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface-க்குச் போகவேண்டும்.
# உங்களது UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உங்கள் கணக்கில் லாக்இன் செய்ய வேண்டும்.
# தற்போது ஆன்லைன் சேவைகளுக்குச் சென்று உங்களது கோரிக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். (படிவம்-31, 19, 10C மற்றும் 10D).
# அதன்பின் உங்களது திரையில் ஒரு புது வலைப்பக்கம் தோன்றும்.
# அவற்றில் உங்களது பெயர், பிறந்ததேதி மற்றும் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் ஆகிய அனைத்து விபரங்களையும் உள்ளிட வேண்டும்.
# தற்போது இங்கே உங்களது வங்கிக்கணக்கு எண்ணை உள்ளிட்டு “சரிபார்” (verify) என்பதைக் கிளிக்செய்ய வேண்டும்.
# உங்களது திரையில் ஒரு பாப்-அப் தோன்றும். அவற்றில் “உடன்படிக்கைச் சான்றிதழை” (சர்டிஃபிக்ட் ஆஃப் அண்டர்டேகுங்)-ஐ வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.
# டிராப்டவுன் மெனுவில், பிஎப் அட்வான்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
# டிராப் டவுன் மெனுவில் இருந்து கீழ் தோன்றும் மெனுவிலிருந்து, தொற்று நோய் என்பதை தேர்ந்தெடுத்து பணம் எடுக்கும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
# தேவையான தொகையை உள்ளிட்டு காசோலையின் ஸ்கேன் செய்த நகலை பதிவேற்றி உங்களது முகவரியை உள்ளிட வேண்டும்.
# தற்போது ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் (OTP) அனுப்பப்படும். அதனை உள்ளிட வேண்டும்.