Categories
தேசிய செய்திகள்

EPFO புதிய அசத்தலான ஓய்வூதிய திட்டம்…. இனி 60 வயதுக்கு மேல் பிரச்சனையே இல்லை…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பலரும் தங்களின் ஓய்வு காலத்தில் பலன்களை பெறுவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேமிப்புகளை தொடங்கியுள்ளனர்.இதில் ஊழியர்கள் அனைவரும் தங்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து சிறு தொகையை சேமித்து வருகிறார்கள். அதேசமயம் பணியாற்றும் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை அவர்களின் பி எப் கணக்கில் செலுத்தி வருகிறது. இந்தத் தொகை ஓய்வு பெறும் காலத்தில் வட்டி விகிதத்துடன் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் கவரேஜை அதிகரிக்க உள்ளதாக தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். தற்போது மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கவரேஜ் என்பது கிடையாது.

இந்த கவரேஜ் அதிகரிக்கப்பட்டால் பிஎஃப் திட்டத்தில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு 60 வயதுக்கு மேல் 3000 ரூபாய் வரை மாதம் தோறும் கிடைக்கும். இந்த புதிய ஓய்வூதிய திட்டம் மூலம் ஓய்வூதியம் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம்,குழந்தைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களும் பயனர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஓய்வூதிய பலன்கள் பயனாளிகளுக்கு 15 ஆண்டுகளாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |