EPFO ஓய்வூதிய பயனாளிகளின் சொந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் EPFO நிறுவனத்திற்கு சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் 2.7 கோடி பேர் பென்ஷன் நிதி வைத்துள்ளனர். இந்நிலையில் லட்சக்கணக்கான ஓய்வூதிய பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில் வெளிப்படையாக திறந்த வெளியில் உள்ளது என்று சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் 28 கோடி பதிவுகள் இன்டர்நெட்டில் வெளிப்படையாக இருப்பதாகவும் அந்த தகவல்களுக்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு கூட இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் ஓய்வூதிய பயனாளிகள் மோசடி தாக்குதல்களால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது பென்ஷன் பயனாளிகளின் பெயர், பிறந்த தேதி, திருமண நிலை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல முக்கிய விவரங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இன்டர்நெட்டில் வெளிப்படையாக உள்ளது. எனவே இதனால் பென்ஷன் கணக்கு தாளர்கள் மோசடி தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதால் ஓய்வூதியம் கொள்ளை அடிக்க படலாம் என்பதாலும் EPFO தரப்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
[BREACH ALERT] 280M+ records in this Indian database, publicly exposed. Where to report? @IndianCERT ? pic.twitter.com/lkY55epCyy
— Bob Diachenko 🇺🇦 (@MayhemDayOne) August 2, 2022