அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பெண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனை கழிப்பறையில் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட சிலர் மருத்துவர் மூவி என்பவருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 7 மாத பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது கடந்த அவர்கள் தானிப்பாடி உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தன.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த குழந்தையின் உடலை விட்டுச் சென்றவர்கள் யார் ,என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளிஇருந்த ல் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.