கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். சுரேஷ்குமார் அதே பகுதியில் ஒர்க்க்ஷாப் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்து விட்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அப்போது சுரேஷ்குமாரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.