மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.