கண்மாயில் குளிக்கச் சென்ற ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவாகுளம் பகுதியில் குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயிக்கு குமரேசன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கண்மாயில் உள்ள மிகவும் ஆழமான பகுதியில் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது அதில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரின் உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.