இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .ஆனால் இதற்கு முன் நடந்த 2 போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. இதனால் இது ஒரு பக்கம் சர்ச்சையாக வருகிறது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்தியா தற்போது 2-வது இன்னிங்சில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஜார்வோ என்பவர் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது மைதானத்திற்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் .
Today’s play was as good as it can get with @ImRo45 @cheteshwar1 @imVkohli and Jaarvo showing great intent and grit!🤩😂😂 Keep going fellas and stop doing this Jaarvo. #IndvsEng
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 27, 2021
இதற்கு முன்னதாக லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் திடீரென்று மைதானத்துக்குள் நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது .இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்திலும் ஜார்வோ மைதானத்திற்குள் நுழைந்தார். இதை கண்ட மைதான ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் .இந்நிலையில் நேற்று நடந்த 3-வது ஆட்டம் குறித்து அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் “ரோகித் சர்மா, புஜாரா மற்றும் கேப்டன் கோலி ஆகியோரின் திறமை ஆட்டத்தில் வெளிப்பட்டது,” என்று அஸ்வின் பதிவிட்டுள்ளார். அத்துடன் “ஜார்வோ நீங்கள் செய்வதை நிறுத்துங்கள் “என்றும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.