Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி வந்ததுன்னு தெரியல… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொருவளூர் பகுதியில் 60 வயதுடைய ராமாயி என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமாயி வீட்டில் இருந்த போது திடீரென  அவருடைய காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டது. இதனால் ராமாயி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார்.

இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று கீழே விழுந்து கிடந்த ராமாயியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராமாயி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |