Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதும் அங்க தான் போவான்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் நடந்த சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தானூர்பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், அனுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுதீப் தினந்தோறும் காலைக் கடனை கழிப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டு அங்கு இருக்கின்ற கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு காலைக் கடனை கழிப்பதற்காக சென்ற அனுதீப் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது பெற்றோர் உடனடியாக  கிணற்று பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கிணற்றின் மேல் பகுதியில் அனுதீப்பின் காலணி  மட்டும் இருந்ததை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து  தனது மகன் கிணற்றுக்குள் தவறி விழுந்து இருப்பானோ என்ற அச்சத்தில் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் . அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அனுதீப்பின் சடலத்தை கைப்பற்றினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |