மதுரையில் செல்வாக்குமிக்க நபராக விளங்கும் செல்லூர் ராஜுவுக்கு இபிஎஸ் தரப்பில் முக்கியத்துவம் இல்லை என்றும் மாற்றாக முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமாரையே எடப்பாடி பழனிச்சாமி அதிகம் நம்புகிறார். அதனைப் போலவே நீண்ட நாட்களாக ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு இடையே பவர் பாலிடிக்ஸ் நடைபெற்று வருகிறது.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆர் பி உதயகுமாரை அங்கீகரித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வரை வழங்கி இருப்பது செல்லூர் ராஜுவை மிகவும் வெறுப்படையை செய்துள்ளது. அதனால் செல்லூர் ராஜு ஓபிஎஸ் பக்கம் சாயும் மனநிலையில் இருந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு இருவரும் மாறி மாறி கட்சி தலைமையை உரிமை கொண்டாடி வரும் நிலையில் இபிஎஸ் பக்கம் இருந்து பலரும் தற்போது ஓபிஎஸ் பக்கம் தாவும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் எல்லாரும் ஒன்றாக செயல்படுவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு கிட்டத்தட்ட தென் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவருமே எதிர்த்து தெரிவித்து விட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மட்டும் கப்சிப் என்று இருக்கிறார். சமீப காலமாக ஓபிஎஸ் குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்போடு உறவில் இருக்கிறார் என்ற சந்தேகத்தை செல்லூர் ராஜு செயல்பாடுகள் உறுதி செய்யும் படி இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது