செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு மக்களை தேடி மருத்துவம் என்று சொல்லுகிறார்கள். சாமானியர்களாக இருக்கக்கூடியவர்கள் இல்லங்களிலே ஏற்கனவே இருந்த திட்டத்தை பெயரை மாற்றி ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்திலே ஒரு பட்டியல் உண்டு. அங்கே சுகர் பேஷண்ட்டு, பிரஷர் உள்ளங்களுக்கு எல்லாம் அந்த லிஸ்ட் வச்சு மருந்து கொடுப்பாங்க.
அதையே பெயர் மாற்றி ஏதோ இவர்கள் புதிதாக கண்டுபிடித்த சத்தியவான்கள் போல காட்டிக் கொள்வதற்காக மக்களை ஏமாற்றுகிற ஒரு செயலாக தான் இந்த மக்களை தேடி மருத்துவம் என்கிற அந்த திட்டம் இருக்கிறது என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி 2000 அம்மா மினி கிளினிக்கை தொடங்க வேண்டும் என்று அவர்கள் இந்த அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
அது போன்று விலைவாசி உயர்வு, அதேபோல மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இவையெல்லாம் தொடர்ந்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்திருக்கின்ற அண்ணன் எடப்பாடி அவர்கள் இந்த அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அதையெல்லாம் காது குடுத்து கேட்கிற மனநிலையிலே இல்லை என தெரிவித்தார்.
திமுக அரசு அமைகிற ஒவ்வொரு காலத்திலும் மின்சார பிரச்சனை வந்துட்டே இருக்கு அந்த திருத்திய மசோதாவுக்கு வந்து நாடாளுமன்றத்திலே எதிர்ப்பு தெரிவிப்போம் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க அது எந்த அளவுக்கு உடன்படுமா என்ற கேள்விக்கு,
நாடாளுமன்றத்தில் குழுவுக்கு அனுப்பி இருக்காங்க. இங்கே வந்து ஏற்கனவே நாம மின்சார தட்டுப்பாட்டுல இருக்கோம். மின் கட்டண உயர்வு இருக்குன்னு 25 மாவட்டத்துலயும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி அவர்களின் ஆணைக்கிணங்க மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றோம். ஆகவே இவையெல்லாம் எப்போதெல்லாம் திமுக அரசு வருகிறதோ அப்போதெல்லாம் மின் பற்றாக்குறை தான் வருகிறது. மின்மிகை மாநிலமாக அம்மாவின் அரசு அண்ணன் எடப்பாடி தலைமையிலே மீண்டும் அமைகின்ற பொழுது தமிழ்நாடு கண்டிப்பாக மின்மிகை மாநிலமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.