அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு திடீரென்று இபிஎஸ் வருகை தந்ததால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீர் அமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள இபிஎஸ், சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.