தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முன்னர் வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் வருகையால் அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் சசிகலா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதிமுக கொடியுடன் காரில் பயணம் செய்தது, மேலும் அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதையடுத்து நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதிபடக் கூறினார். ஆனால் தற்போது தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார்.
இதனால் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், தன்னால் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாகவோ, அதிமுக தோற்றுவிட்டதாகவோ இருக்க கூடாது என்பதால் ஒதுங்கி இருக்கிறார் என்று கூறுகின்றனர். மேலும் இவர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதால் அவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வரை தோற்கடிக்க திட்டம் போடுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.