கட்சியும், ஆட்சியும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அதிமுக எம்எல்ஏக்கள் பேசத் தொடங்கினர். மேலும் அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், அதிமுகவில் எந்தவித குழப்பமும் இல்லை. கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.