Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு ..!!

ஜூலை 11ஆம் தேதி அதிமுக கூட்டிய பொதுக்குழு  செல்லாது என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு மீதான வாதங்கள் இன்று காலை தொடங்கி 10.30 மணியளவில் தொடங்கியது. ஒரு உணவு இடைவேளையான 1.30 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மீண்டும் 2:15 மணிக்கு தொடங்கி வாதங்கள் சற்று நேரத்துக்கு முன்பாக முழுமையாக நிறைவடைந்திருந்தது.

மனுதாரராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி,  எதிர் மனுதாரர் இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என அனைத்து தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர மோகன் ஆகியோர் முன்பு தங்களது இறுதி வாதங்களை முன் வைத்தனர். இறுதி வாதங்கள் அனைத்தும் எடுத்து வைக்கப்பட்ட நிலையில்,  வழக்கின் தீர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

அதே சமயம் அனைத்து தரப்பின் எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அவகாசம் வழங்கி இருக்கிறார். நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் திங்கட்கிழமையில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டாலும், பெரும்பாலும் புதன் அல்லது வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

ஒரு வேலை மனுதாரர்கள் தரப்பில் நாளை எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்துவிட்டு நீதிபதிகள் முன்பாக விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பட்சத்தில் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Categories

Tech |