மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைக்க என்னென்ன முயற்சிகளை செய்ய வேண்டுமா அவை அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்றவாறு வியூகங்களை வகுத்து களம் காணப்போகிறது. அதன்படி தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணியுடன் அதிமுகவையும் தேமுதிகவையும் இணைத்து மெகா கூட்டணி அமைக்கும் திட்டம் பாஜகவிடம் இருக்கிறது. ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார். ஆனால் பாமக கூட்டணியில் இல்லாவிட்டால் வட மாநிலங்களில் வாக்குகளை பெறுவது கடினமாகிவிடும். பாமக தனித்து நின்று அந்த பகுதியில் வாக்குகளை பிரித்தால் திமுகவுக்கு வெற்றி எளிதாகிவிடும் என்பதால் மீண்டும் அன்புமணியை இந்த பக்கம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி தான் மெல்ல கரைந்து பாஜக வாக்கு வங்கியாக மாறி வருகிறது. இருப்பினும் இனி இரண்டு தேர்தல்களுக்கு அதிமுகவுடன் இணைந்து சென்றால்தான் அந்த வாக்கு வங்கியை தன் பக்கம் மாற்ற முடியும் என்று டெல்லி தலைமை நினைக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் ஒருங்கிணைந்த அதிமுகவால் நான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் ஓபிஎஸ்ஸை சேர்த்துக்கொள்ள வேண்டும், அமமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக முன்வைக்கிறதாம்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த இரு விஷயங்களுக்கும் ஒத்து வரமாட்டேன் என்பதை வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி . அதுமட்டுமில்லாமல் அமித் ஷா வந்த நேரம் எல்லாம் அவரை சென்று சந்திக்க வேண்டுமா என்றும் தனது பாணியை மெல்ல மாற்றி உள்ளார். இதை பாஜக மேலிடம் கவனித்து வருகிறதாம். அதன் பிறகு தான் தினகரனுக்கு புது அசைண்ட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதாவது, சசிகலா கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலைக்கு வந்துவிட்டாராம். அவரது ஆதரவாளர்கள் முழுக்க டிடிவி தினகரன் பக்கம் இருக்கிறார்கள். தினகரன் பாஜகடன் ரகசிய உடன்படிக்கைக்கு வந்து விட்டார் என்று கூறப்படுகிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமியின் குரலை குறைக்க, டெல்லி தினகரனை பேச வைக்கிறது. அதன்படி ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசுங்கள் அது வெளிப்படையாக நடைபெறட்டும். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி நம் பக்கம் வருவார் என்று டெல்லி கூறியுள்ளதாம். இதனையடுத்து ஓபிஎஸ் குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். அதன்பிறகு எந்த இடத்தை சந்திப்பது, எப்போது சந்திப்பது போன்ற ஆலோசனைகள், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் இந்த சந்திப்பு நடந்த பின்னரும் எடப்பாடி பழனிச்சாமி கேடுபடி காட்டினால் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவும் டெல்லி வைத்தியம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..