செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதியரசர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு, புரட்சித் தலைவரின் சட்ட விதிகளின் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.அதுதான் உச்ச நீதிமன்றம் வரைக்கும் தொடரும். ஏனெற்றால் அது ஒரு சரியான தீர்ப்பு, அதனால அது தான் தொடரும் என்று நான் எனக்கு தெரிஞ்ச சட்ட அனுபவத்துல சொல்றேன்.
எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் சிறைக்கு போனும்னு எண்ணம் இல்லை. எடப்பாடி அவர்கள் திருந்தனும். நம்ம ஊர்ல எல்லாம் சொல்லுவோம்… திருக்குறளில் வள்ளுவர் என்ன சொல்லி இருக்காரு என்றால் ?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. அதனால்,
செய்நன்றியை மறந்து, நம்பிக்கை துரோகம் என்பது ஒரு அருவருக்கத்தக்க ஒரு குணாதிசயம். வேற எந்த ஒரு தவறு செய்தாலும் மன்னித்து விடலாம். செய்நன்றி மறந்தவர்களுக்கு, இறைவனே நினைச்சாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இறைவன் நினைச்சாலும் தடுக்க முடியாது. வருங்கால அரசியலில் எல்லாம் நடக்கும், மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார்