வரவு கூடும் போது செலவு கூடுமென்று தமிழக முதல்வர் பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் , பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று பால் உற்பத்தியாளர் அரசை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இருக்கிறது. பாலை மற்ற இடத்திற்கு கொண்டு செல்ல டீசல் உயர்வு காரணமாக டிரான்ஸ்போர்ட் கட்டணம் உயர்ந்துள்ளது.சம்பள விகிதம் எல்லாருக்கும் உயர்ந்திருக்கின்றது. கூலி உயர்ந்து இருக்கிறது . வரவு கூடும் போது செலவும் கூடும்.
விவசாயிகளின் கால்நடை வளர்ப்பு சாதாரண விஷயம் கிடையாது .கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை அதிகரித்துள்ளது. எனவே பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று , உற்பத்தி விலையை கணக்கிட்டு அரசு பசும்பாலுக்கு 4 ரூபாயும் எருமைப் பாலுக்கு 6 ரூபாய்_யும் விலையை உயர்த்தி இருக்கின்றது. இன்றைக்கு சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக பாலின் கொள்முதல் விலை உயர்த்தபட்டிருக்கின்றது.