Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் -க்கு தொடர்பு இருக்கு…! தமிழகம் முழுவதும் போராட்டம்… கொளுத்தி போட்ட ஓபிஎஸ் டீம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, கொடநாடு வழக்கில் எங்களுடைய மருத அழகு ராஜிடம்  விசாரணை நடந்தது, அது  என்ன கோணத்தில் நடக்கிறது என்று புரியவில்லை ? அதற்கு டாக்டர் சுதாகர் ஒருவர் இன்சார்ஜா போட்டீர்கள். இந்த அரசு அதை வெளியில் கொண்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லியாச்சு, ஆனால் இதுவரை முடிவு வரமாட்டேங்குது. கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக இனி முடிவு வரவில்லை என்று சொன்னால், நாங்கள் வேறு வழி இல்லை அந்த கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும் சயான் சொன்ன மாதிரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இருக்கிறது என்று சொல்லியும்,

நீங்கள் சும்மா இருக்கிறீர்கள். ஆகவே அதை எதிர்த்து அண்ணன் ஓபிஎஸ்  அனுமதியோடு, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். அதை நான் அங்கிருந்து ஆரம்பிப்பேன் நீலகிரியில் இருந்து, அரசு உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். இந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கட்சியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீட்டெடுத்தார், அண்ணா ஆட்சி பீடத்தில் அமர்த்தினார், பின்னர் புரட்சித்தலைவி அம்மா மீட்டெடுத்தார், வெற்றிகளை குவித்தார்.

இரண்டு முறை தொடர் வெற்றியை தந்தார். இன்னுரையும்  தந்து, இவ்வளவு நடந்தது. ஆக ஒவ்வொரு காலகட்டத்திலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா வளர்த்த இந்த இயக்கத்தை, தொண்டர்கள் வாழும் இந்த இயக்கத்தை ஒரு தலைவர் காப்பாற்றுவார் எப்படியாவது காப்பாற்றுவார் ? என்று எங்களுக்கு தெரியும். அந்த காப்பாற்றுகின்ற இடத்தில்தான் ஓபிஎஸ் இருக்கிறார். ஆகவே அதை பார்த்துக் கொள்வோம்.

அம்மா இருக்கும்போது இந்த எடப்பாடி பழனிச்சாமி யார் என்றே தெரியாது, எத்தனையோ முறை அம்மா அழைத்து பேசுவார்கள், பழனிச்சாமியை அழைத்து நான்  பார்த்ததே இல்லை. இன்றைக்கு பழனிச்சாமி கையில் பணம் வந்துவிட்டது ஜெயக்குமார் சொல்கிறார், பணம் மழையா பொழிந்து, எங்க வைப்பது என்று தெரியாமல் வேலுமணியும், தங்கமணியும், பழனிச்சாமியும் அந்த கூட்டம்….

பொன்னையன் அண்ணன் அழகா சொல்லி இருக்கிறார், பணம் மாட்டியுள்ளது, ஒன்பது எம்எல்ஏ அங்க, 10 எம்எல்ஏ அங்க,  பகல்லையே குடிகாரன் என்று அவரே  சொல்லியிருக்கிறார். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அத்தனையும் வெளியே வரும், ஆகவே தான் சொல்கிறேன். ஜெயிலிலிருந்து கட்சியை நடத்த முடியாது. ஓபிஎஸ் சொல்வதை கேட்டு ஒற்றுமையாக போங்க என்று, ஜெயக்குமார் கேட்கவில்லை என்றால் சந்திப்போம் என தெரிவித்தார்,

Categories

Tech |