Categories
மாநில செய்திகள்

EPS இல் இருந்து OPSக்கு தாவிய முக்கிய புள்ளி… யார் தெரியுமா?…. செம குஷியில் ஓபிஎஸ் தரப்பினர்…..!!!

சென்னையில் எழும்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். அதிமுகவில் பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதற்கு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நாற்காலியான நிரந்தர பொதுச் செயலாளர் பதவி அடைய எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில்தான் ஓபிஎஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு பரபரப்புக்கு ஆளாகியுள்ளது. அதாவது அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். இவர் முதலில் ஓபிஎஸ் அணியில் தான் இருந்தார். இந்த தர்மயுத்தம் நடந்த காலகட்டத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. ஆனால் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவருக்கு ஆதரவாளித்து விட்டார். இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஓபிஎஸ் பக்கம் மீண்டும் சாய்ந்து அரசியல் அரங்கில் பேசுபொருளாகி வருகிறார். அப்படி என்ன காரணம் என்று கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, எடப்பாடி அணியில் புதிய அங்கீகாரமும் முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் மைத்ரேயன் பேசியது தான் ஹைலைட். இதை கேட்க கேட்டு எடப்பாடி தரப்பு கடும் கோபமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதாவது, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பின்னர் கழகத்தின் மூன்றாம் தலைமுறை நிகழ்கால பரதன். இவரை போல ஒரு தொண்டனை பெறுவதில் நான் செய்த பாக்கியம் என்று ஜெயலலிதாவை பாராட்டியுள்ளார். தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய ஒருங்கிணைப்பாளர். அக்டோபர் 8 ஆம் தேதி கழக வரலாற்றிலேயே முக்கியமான நாள் திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுக தோன்றுவதற்கான வித்தை விதைத்தார். தலைவர் கணக்கு கேட்ட நான் அந்த நாள். இதன் தொடர்ச்சியாக 10 ஆம் தேதி கழகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். 17ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோன்றுகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு நிரம்புகிறது. அன்று எம்ஜிஆர்க்கு நடந்தது தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்குநடக்கிறது. எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட போது தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை யாரும் அவர் பின்னால் இல்லை. நின்றது தொண்டர்களும், பொதுமக்களும் தான். இன்று ஓபிஎஸ் பின்னால் நிற்பதும் தொண்டர்கள் தான். அன்றைய தினம் தொண்டர்கள் பொதுநல மக்கள் ஆதரவால் ஆட்சிக்கட்டிலில் அமைந்தார் எம்..ஜி.ஆர். அதனைப் போல ஓபிஎஸ் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று மைத்ரேயன் கூறியுள்ளார்.

Categories

Tech |