மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 18 ஆம் தேதியன்று மாநிலங்களவைத் தேர்தலானது நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து அதிமுக கூட்டணிக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்களின் பெயர்களை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளதன்படி,
அதிமுக சார்பில் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பா.ம.க கட்சிக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.