Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆர் நினைவு தினத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒரே நேரத்தில் மரியாதை”…. வெளியான பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். அதில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்துவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று  தற்போது ஓபிஎஸ் தரப்பும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி காலை 10.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் வருமான ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் மரியாதை செலுத்துவார்கள்.

இதைத் தொடர்ந்து நினைவிடத்தில் உறுதிமொழி எடுக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் காலை 10:30 மணியளவில் அதாவது ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |