செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள்.
ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறக் கூடிய திட்டங்களை வகுத்து, அதற்கான பணிகளை துரிதப்படுத்தி, ஜனவரி மாதம் இறுதிக்குள் அல்லது தை மாதம் இறுதிக்குள் நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளிலும் போட்டியிடும். அதிமுகவில் நடப்பது அவர்களுடைய கட்சியினுடைய விஷயங்கள். அதில் பாரதிய ஜனதா கட்சி எந்த காரணத்தை கொண்டும் தலையிடுவதற்கு தயாராக இல்லை. அதை அவர்களே முடித்துக் கொள்வார்கள்.
எல்லா கட்சிகளின் நோக்கமும் கூட, அந்தந்த கட்சிகள் முதல் நிலைக்கு வர வேண்டும். இதுதான் எல்லா கட்சிகளுமே நோக்கமாக இருக்கும். பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்… தமிழகத்தில் முதல் காட்சியாக வரவேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். அதை நோக்கிய பணிகளை தான் நாங்கள் துரிதப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு தலைவர் போயிட்டு வந்ததை யார் அழைத்தார்கள் ? எப்படி அழைத்தார்கள் ? எல்லாம் அனாவசியமான கேள்வி, தேவையற்ற கேள்வி. ஒரு நிகழ்ச்சியில் அண்ணனை இபிஎஸ் அவர்கள் வந்தபோது, அவரை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்கிறீர்கள். இதெல்லாம் தேவையற்ற கேள்விகள், நான் சொல்ல வேண்டிய பதில்களும் தேவையில்லாத ஒன்று என தெரிவித்தார்.