சேரன் , சோழன் , பாண்டியன் ஆட்சிக்கு பிறகு அதிக தடுப்பணையை கட்டியது முதலமைச்சர் பழனிசாமி அரசுதான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , நீலகிரி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்புக்கு திமுக 10 கோடி ரூபாய் கொடுத்ததாக மு க ஸ்டாலின் கூறுவது பொய் . தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிட்டில் நிவாரண உதவி செய்து விட்டு எதோ திமுக அறக்கட்டளையில் இருந்து நிதி கொடுத்ததைப் போல ஸ்டாலின் கூறி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசும் போது , தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்காகவே முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் , சேரன் சோழன் பாண்டியன் ஆட்சிக்குப் பிறகு மக்களின் குடிநீர் தேவைக்காக அதிக தடுப்பணை கட்டியது எடப்பாடி பழனிசாமி அரசுதான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புகழாரம் சூட்டினார் .