அரியர் தேர்வுகளுக்கு தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் .
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் இதுதான் முதல் முறை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சென்னை லேடி வெல்லிங்டன் கல்லூரியில் ஜெ., சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் “அரியர் தேர்வுகளுக்கு தேர்ச்சி வழங்க வேண்டும்” என்று கல்லூரி மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர். மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஈபிஎஸ் சிரித்த முகத்துடன் ஓகே கண்டிப்பாக பரிசீலனை செய்கிறேன் என்று கூறியுள்ளாராம்.