Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ் தரப்பு – பதில் அளித்த ஓபிஎஸ் ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும்  தீர்மானங்களை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் இன்றைக்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு இருக்கின்றோம். மற்றபடி அவர்கள் ( எடப்பாடி தரப்பு ) குறித்த கேள்விகளை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |