Categories
அரசியல் மாநில செய்திகள்

மே 24 ஆம் தேதி…. முதல்வர் பதவியை இழக்கிறார் EPS- சுனில் அரோரா…!!

முதல்வர் ஈபிஎஸ் பதவிக்காலம் 24 ஆம் தேதியுடன் முடிகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஈபிஎஸ் பதவிக்காலம் 24 ஆம் தேதியுடன் முடிகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், வாக்கு பதிவு முடிந்து இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும், அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |